உலகம் செய்திகள்

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஜோ பைடன்.

ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். 

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ரஷ்யாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன். 

ரஷ்யாவுடன் இருப்பதை விட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளதாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாளை வெள்ளிக்கிழமை 12 மணிநேர மின்வெட்டு!

namathufm

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Thanksha Kunarasa

யாழ்ப்பாணத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment