இலங்கை செய்திகள்

திருட்டு குற்றச்சாட்டில் இளைஞன் கைது

யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேக்கத்திற்கு இடமான முறையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை குறித்த இளைஞன் எடுத்து சென்ற போது , அப்பகுதியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார் இளைஞனை மறித்து விசாரணைகளை முன்னெடுத்த போது , துவிச்சக்கர வண்டியினை இளைஞன் திருடி செல்வதனை அறிந்து இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட துவிச்சக்கர வண்டியில் வருவோர் , வைத்தியசாலை சூழலில் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி விட்டு செல்லும் போது அவை களவாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அது தொடர்பில் பல முறைப்பாடுகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் வைத்தியசாலை சூழலில் தமது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை தற்போது 35 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிம்ஸ்டெக் கூட்டத்தின் அடுத்த தலைமைப் பொறுப்பு தாய்லாந்திற்கு

Thanksha Kunarasa

யுக்ரேன் கொலைகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் சுகாதார அமைச்சர்

Thanksha Kunarasa

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஜோ பைடன்.

namathufm

Leave a Comment