அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உடனடியாக செய்யக்கூடிய நான்கு விடயங்கள் சம்பந்தமாக இன்று இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடனடியாக செய்யக்கூடிய அந்ந நான்கு விடயங்களில் முதலாவது, நீண்ட காலமாக சிறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் விடுவிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுப்பாரென்றும், நீதி அமைச்சர் என்னோடு அது குறித்து பேசி நீண்ட காலமாக இருக்கக்கூடியவர்கள் மிகவும் சீக்கிரமாக விடுவிக்கப்படுவதையும், பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைக்கின்ற அரசாங்கத்தினுடைய செயற்திட்டத்தின் கீழ் இவர்களின் விடுதலையையும் உடனடியாக செய்வதாக இணங்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

