இலங்கை செய்திகள்

உலக வங்கியிடமிருந்து கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!

உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்காக உலக வங்கியிடம் இந்த கடன் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஏற்கனவே பல திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் அமெரிக்காவில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு

Thanksha Kunarasa

உலகின் மிகப்பெரிய கப்பல் ‘Queen Mary 2’ அடுத்த ஆண்டு இலங்கைக்கு வருகை!

namathufm

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு நாளை ஜெனீவா விஜயம்

Thanksha Kunarasa

Leave a Comment