இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இரு அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி, நியாயமான விலையில் வழங்கத் தவறியமை, இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என BASL இன் மனுக்களில் குறிப்பிடுகின்றன.
சட்டமா அதிபர், அமைச்சரவை, மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர், பல அமைச்சுக்களின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.