2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 26 வீதம் குறைந்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். கடன் செலுத்துதல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாணய சபையொன்று நியமிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.