இலங்கை செய்திகள்

இலங்கையின் நவீன தொழில்நுட்பங்களுக்கான செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.

இலங்கையின் நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் நிறுவக பொறியியலாளர்களின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட இரண்டாவது நானோ செயற்கைக்கோள் நேற்று (24) மாலை 5.20 மணியளவில் (இலங்கை நேரப்படி) சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.

ஆர்தர் சி. கிளார்க் மையம் மற்றும் ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த நானோ செயற்கைக்கோள் ‘கிட்சுன்’ KITSUNE ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் பொறியாளர்களால் தொழில்நுட்ப ரீதியாக வடிவமைக்கப்பட்டது. KITSUNE Nano Satellite 30 செ.மீ உயரம், 20 செ.மீ அகலம் மற்றும் 10 செ.மீ தடிப்பும் கொண்டது.

அதி நவீன கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பெப்ரவரி 18 அன்று, KITSUNE Cygnus NG-17 என்ற ரொக்கெட்டில் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கொண்டு செல்லப்பட்டது. இது ஆர்தர் சி. கிளார்க் மையத்தில் டாக்டர் சீதா அரம்பேபொலவின் ஆதரவின் கீழ் நடைபெற்றது. நானோ-செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான பொறியியல் நிபுணத்துவம் நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் இன்ஸ்டிடியூட் இன் பொறியாளர்களால் வழங்கப்பட்டது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்ட தற்காலிக திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

Thanksha Kunarasa

அதிக பணவீக்கம் கொண்ட நாடாக மாறியது இலங்கை!

Thanksha Kunarasa

இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அவதானித்து வருகின்றேன் – நியுசிலாந்து பிரதமர்

namathufm

Leave a Comment