இலங்கை செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – விசேட அறிவித்தல் .

யாழ்.மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையின் விசேட அறிவித்தல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் மாவட்ட இணைப்பதிகாரி தலைமையில் நேற்று (23) திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டு லிட்ரோ, லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் முகவர்களினை சந்தித்து சில அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

.📍எரிவாயு விநியோகத்தில் விநியோகத்தின் விபரங்களை அதிகாரசபையினால் வழங்கப்பட்ட படிவத்தினை நிரப்புவதன் மூலம் பெற வேண்டும்

📍 பிரதேச ரீதியாக தங்களிடம் இருப்பில் உள்ள எரிவாயுக்களைப் பிரித்து முகவர்களே பங்கீட்டு அட்டை முறையில் வழங்க வேண்டும்.

📍இயன்றவரை வியாபார நிலையங்களுக்கு இருப்பில் உள்ள மூன்றில் ஒரு பகுதியேனும் வழங்க முன்வர வேண்டும்.

📍 பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் விநியோக இடத்தில் விநியோகிக்க வேண்டும்.

📍விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதேவேளை முறைகேடான வியாபார நிலையங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்புக்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன

Related posts

ரஷ்யாவின் போருக்கு எதிராக பேர்லினில் 500000 பேர் – போராட்டம்.

namathufm

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம்

Thanksha Kunarasa

டிக்-டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் !!!

namathufm

Leave a Comment