இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சேதன பசளையினை பயன்படுத்தி பயிர் செய்கையில் வெற்றி !

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 64 ஆவது படைப்பிரிவின் தலைமை வளாகத்தில் சேதன பசளை மூலம் மரக்கறி செய்கையினை மேற்கொண்டு நல்ல விளைச்சலினை எதிர்கொண்டுள்ளதாக படைத்தரப்பு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த விவசாயிகளை அழைத்த 64 ஆவது படைத்தரப்பு சேதனை பசளையினை பயன்படுத்தி செய்கை பண்ணிய புடலங்காய், பாகற்காள், பயிற்றங்காய், முருங்கை போன்ற செய்கைகளின் விளைச்சலினை நேற்று(23) விவசாயிகளுக்கு காட்டி அது தொடர்பான விளக்கத்தின கொடுத்துள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர், கமநல சேவை நிலைய அதிகாரி, விவசாய விரிவாக்கற் பகுதி உத்தியோகத்தர்கள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த விவசாயிகள் ஆகியோரை அழைத்த படையினர் தங்களின் சேதனை பசளை பயன்பாடு தொடர்பிலான செய்கைகளை காட்டி விளக்கமளித்துள்ளதுடன் சிறந்த அறுவடையினை தாம் பெற்றுள்ளதை விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக காட்டியுள்ளார்கள்.

சேதன பசளையினை பயன்படுத்தி இவ்வாறான செய்கை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வாறு விவசாயிகள் குறிப்பாக மரக்கறி செய்கையாளர்கள் இதில் வெற்றி காணலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

காயா ஸ்ரீ

Related posts

புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் பொருட்கள்!

Thanksha Kunarasa

பள்ளத்தில் பாய்ந்த வேன்: 5 பேர் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதி

namathufm

வைத்தியர் சாபியின் சம்பள நிலுவையை செலுத்த நடவடிக்கை

Thanksha Kunarasa

Leave a Comment