இலங்கை செய்திகள்

பழமைக்கு மாறும் இலங்கை

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி பாவனைக்கு வந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகள் மீண்டும் சந்தை ஊடாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கோரிக்கை ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய குறித்த இரண்டு பொருட்களும் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிம்னி விளக்குகள் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விளக்குகளின் போத்தல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கரி சூடாக்கி ஆடைகளை தேய்க்கும் இஸ்திரி பெட்டிகள் 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சமகால அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக இலங்கை 50 வருடங்கள் பின்நநகர்ந்துதுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒருவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கை! கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள்!

Thanksha Kunarasa

அவசரகால சட்டத்தை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்

Thanksha Kunarasa

ரோஜாவுடன் சென்ற யுவதிக்கு கண்ணீர்ப்புகை தாக்குதல்

Thanksha Kunarasa

Leave a Comment