நகரங்களுக்கிடையிலான நீண்ட தூர தொடருந்து சேவைகள் Intercity மற்றும் விசேட அதிவேக தொடருந்துகளுக்கான Special train ரிக்கெட் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று (24) தெரிவித்தார்.
சில தொடருந்துகளின் கட்டணங்கள் 60 வீதத்தாலும் சில தொடருந்துகளின் கட்டணங்கள் 50 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சோமரத்ன தெரிவித்தார்.
தொடருந்து திணைக்களத்தின் மரபுப்படி மாதத்தின் முதலாம் திகதி கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்ட போதிலும், வரலாற்றில் முதன் முறையாக தற்போதைய தொடருந்து பொது முகாமையாளர் எவ்வித நடைமுறையும் இன்றி, வழங்கும் நிலைய அதிபர்களுக்கு தெரிவிக்காமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
பயணச் சீட்டுகள் , முன்பதிவு செய்யும் தொடருந்து நிலையங்களுக்கு மட்டும் இன்று அதிகாலை 1.00 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சோமரத்ன கூறினார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த நேரத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த சோமரத்ன, சாதாரண மற்றும் பருவப் பயணச் சீட்டுக் கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தார்.
A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு
யாழ் – கொழும்பு. 2000.00
பொல்கஹவெலை 2000.00
யாழ் – குருணாகல் 1800.00
யாழ் – அனுராதபுரம். 1500.00
வவுனியா. 1500.00
யாழ் – கிளிநொச்சி 1300.00
இரண்டாம் வகுப்பு – ஆசன முற்பதிவு
யாழ் – கொழும்பு. 1500.00
பொல்கஹவெலை 1500.00
யாழ் – குருணாகல் 1300.00
யாழ் – அனுராதபுரம். 1000.00
வவுனியா. 1000.00
யாழ் – கிளிநொச்சி 800.00
மூன்றாம் வகுப்பு ஆசன முற்பதிவு
யாழ் – கொழும்பு. 1200.00
பொல்கஹவெலை 1200.00
யாழ் – குருணாகல் 1000.00
யாழ் – அனுராதபுரம். 700.00
வவுனியா. 700.00
யாழ் – கிளிநொச்சி 500.00
பிந்திய செய்தி
நேற்று நள்ளிரவு (23) அதிகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு ஆசனக் கட்டணங்கள் முன்னறிவிப்பு இன்றி அதிகரித்தால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மலையகம் மற்றும் வடமாகாணத்திற்கான நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான கட்டணங்கள் இன்று அதிகரிக்கப்பட்டன.ரயில் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல் நடத்திய பின் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைக்குள் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.