இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையேற்றத்தினால் பண்டைய கால திருமண முறைக்கு மாறிய மக்கள்

தமிழர்களின் பண்டைய முறையிலான திருமணமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

நெற்கற்றைகளினால் வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும்,மணமகளும் ஆலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் பாரம்பரியங்களை பேணியதாக நடைபெற்றுள்ளது.

தற்போதைய காலத்தில் தமிழர்களின் பண்டைய பாரம்பரியங்கள் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அவற்றினை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த திருமணத்தை நடாத்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Related posts

உக்ரைன் அதிபர் பொம்மையால் குவிந்த லட்சக்கணக்கான டொலர் நிதி

Thanksha Kunarasa

நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாணவன் உயிரிழப்பு.

namathufm

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மின்வெட்டு – அட்டவணை

namathufm

Leave a Comment