உலகம் செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

10,500 உக்ரைனியர்கள் பிரான்ஸில் வதிவிடம் பெற்றனர் !

பிரான்ஸில் இது வரை 10,500 உக்ரைனியர்கள் வதிவிடம் பெற்றனர். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இது வரை 26 ஆயிரம் உக்ரைன் அகதிகள் பிரான்ஸின் எல்லைக்குள் வருகை தந்துள்ளனர்.

போர் தொடங்கியதில் இருந்து இது வரை 26 ஆயிரம் உக்ரைன் அகதிகள் பிரான்ஸின் எல்லைக்குள் வருகை தந்துள்ளனர்.

10 ஆயிரத்து 500 பேருக்கு நாட்டில் வசிப்பதற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஜீன் காஸ்ரோ அறிவித்திருக்கிறார்.

2ஆயிரத்து 400 உக்ரைன் சிறுவர்கள்பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக் கல்விச் செயற்பாடுகளில் இணைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக வதிவிட அனுமதி பெற்றவர்களில் 40 வீதமான அகதிகள் பாரிஸ் பிராந்தியத்தில் தங்கியிருப்பவர்கள் ஆவர்.

மேலும் அகதிகள் வருகை தரக்கூடும் என்பதால் அவர்களுக்காக சுமார் ஒரு லட்சம் வதிவிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

கல்வித் தகுதியை மறைக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Thanksha Kunarasa

உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டில் சண்டையிட அனுப்பாதீர்கள்- உக்ரைன் அதிபர் !!

namathufm

இலங்கையின் நவீன தொழில்நுட்பங்களுக்கான செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.

namathufm

Leave a Comment