இலங்கை செய்திகள்

வானொலி தகராறினால் ஒருவர் வெட்டிக் கொலை

அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (22) பிற்பகல் கிரான்ட்பாஸ், வெஹரகொடெல்ல சந்திக்கு அருகில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தவருக்கு வானொலியை அடகு வைத்துள்ளார்.

அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வெஹரகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன விடுதலை தேடி பொத்துவிலில் இன்று ஆரம்பமான பேரணி!

namathufm

முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை – அனுமதிக்க முடியாதென தீர்மானம்

Thanksha Kunarasa

உலகின் மிகப் பெரிய “அன்ரனோவ்” ரஷ்யாவின் தாக்குதலில் அழிந்தது!

namathufm

Leave a Comment