கர்ப்பிணியான மனைவி ஆசையாக கேட்ட பலாக்காய் பறிக்க மாமாவின் காணியில் இருந்த பலா மரத்தில் பலாக்காய் பறித்த மருமகனை அவரது மாமா குத்திக் கொலை செய்துள்ளார்.
கத்திக் குத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வடக்கு எல்பிட்டிய, எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும், உயிரிழந்த இளைஞனின் மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.