கடதாசி மற்றும் தற்போதைய மின்தடை, பாடப் புத்தக அச்சிடல் உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.என்.இளபெரும தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களை பாடசாலைகளுக்கு விநியோகிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
COVID-19 தொற்றுநோய்க்கு முந்தைய நாட்களில் பாடப் புத்தகங்களை அச்சிடுவது ஒரு பிரச்சினையாக இல்லை. கொவிட் தொற்றுநோய் காரணமாக அரச அச்சகம் மற்றும் தனியார் பிரிண்டர்களின் பல பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், 45% பாடசாலை பாடப் புத்தகங்கள் அரச அச்சகத்தால் அச்சிடப்பட்டன என்று அவர் கூறினார்.
நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே சுமார் 38 மில்லியன் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 32.5 மில்லியன் பாடப் புத்தகங்கள் அச்சிடப்படும் என்று அவர் கூறினார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் உட்பட, பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் ரூ.2,338 மில்லியன் செலவிட்டுள்ளது. மாகாண புத்தகக் கடைகளுக்கும் நேரடியாக பல பாடசாலைகளுக்கும் மொத்தம் 34.8 மில்லியன் (91.8%) பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. 31.6 மில்லியன் (97%) பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன.
இருப்பினும், அடுத்த பாடசாலை தவணை தொடங்கும் முன், மீதமுள்ள பாடப் புத்தகங்களை அச்சிட உள்ளது. மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பாடப் புத்தகங்களை வழங்குமாறு அச்சக ஊழியர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிருஜன்