மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய்இ, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 20 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்தியளவில் வெளிவந்த எந்த ஒரு படத்திற்கு ரூ. 20 கோடிக்கு ஆடியோ ரைட்ஸ் விற்பனையாகியதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.