நைஜீரியாவில் உள்ள சம்பாரா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும், ஆட்கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் (21) வடமேற்கு மாகாணமான சம்பாரா மாகாணத்தைச் சேர்ந்த கனர் கியாவா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்திருக்கிறது.