இலங்கை செய்திகள்

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக கடிதம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் குறித்த கடிதம் செல்லுபடியாகும் என அவர் கூறினார். அடையாளத்தை உறுதிப்படுத்தும் கடிதம் விநியோகிக்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

காயா ஸ்ரீ

Related posts

கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

Thanksha Kunarasa

இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு குறைப்பு

Thanksha Kunarasa

மனநிறைவோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை!-மாவை

Thanksha Kunarasa

Leave a Comment