உலகம் செய்திகள்

உக்ரைன் அகதிகளுக்கு நிதி வழங்க நோபல் பதக்கத்தை விற்கும் ரஷ்ய பத்திரிகையாளர்

உக்ரைன் அகதிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது நோபல் பரிசை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முரடோவ் (60) என்பவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார்.

நோவாயா காஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசுத் தொகையினை அவர், மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக வழங்கினார்.

இந்நிலையில், தற்போது உக்ரைன் அகதிகளுக்கான உணவு மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ செலவுக்காக நிதி திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய நோபல் பதக்கத்தை ஏலம் விட அவர் முடிவு செய்துள்ளார்.

உக்ரைனிலிருந்து இதுவரை 35 இலட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். ஒரு நாளுக்கு சராசரியாக இரண்டு இலட்சம் மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும்- புடின்

Thanksha Kunarasa

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்

Thanksha Kunarasa

பொரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை!!

Thanksha Kunarasa

Leave a Comment