இலங்கை செய்திகள்

இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்த கட்டார் உறுதி!

இலங்கை மற்றும் கட்டார் ஆகிய இரு நாட்டு மக்களினதும் நலனுக்காக இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும் நட்புறவையும் மேம்படுத்துவதற்கு கட்டார் உறுதியளிப்பதாக இலங்கைக்கான கட்டார் தூதுவர் சொரூர் உறுதியளித்துள்ளார்.

கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி.அல்-சொரூர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று முன் தினம் இடம் பெற்றது.

இதன் போதே இவ் விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவையில் கட்டார் நல்கிய வலுவான ஆதரவையும் இலங்கைக்கான அணுகுமுறையையும் பாராட்டிய அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் நடைபெற்று வரும் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பு, உறுதியான நட்புறவு மற்றும் பன்முக உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் மேலும் உறுதியளித்தார். இரு நாட்டு மக்களினதும் நலனுக்காக இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும் நட்புறவையும் மேம்படுத்துவதற்கு கட்டார் உறுதியளிப்பதாக தூதுவர் சொரூர் உறுதியளித்தார்.

Related posts

பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் கலந்துகொள்ளவில்லை

Thanksha Kunarasa

சிறிலங்காவுக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணை – பிரித்தானியா !

namathufm

மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா

Thanksha Kunarasa

Leave a Comment