உலகம் செய்திகள்

அணு விபத்து அல்லது தாக்குதல் நடந்தால் : பிரான்சில் போதியளவு அயோடின்கையிருப்பில் – அமைச்சர் தகவல்

பிரான்சில் அதன் மக்கள் தொகைக்குதேவையான அளவு அயோடின் மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் போரின் விளைவாக அணு ஆயுத மோதல் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளதை அடுத்தே அமைச்சர் இத் தகவலை ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

அணு ஆயுத சம்பவம் ஒன்றினால் ஏற்படுகின்ற அணுக் கதிரியக்கம் மனிதர்களது உடலில் ஏற்படுத்தக்கூடிய தைரொய்ட் புற்று நோய் (thyroid cancer)ஆபத்தில் இருந்து அயோடின் பாதுகாப்பு வழங்கும் என்பதால் அதனை வாங்கிச் சேமிப்பதில் பலரும் அக்கறை காட்டி வருகின்றனர்.

அவசர சமயத்தில் நாட்டின் முழுச் சனத் தொகையினருக்கும் பயன்படுத்துவதற்கு 130 மில்லியன் அயோடின் மாத்திரைகள் தேவை என்றும், நாட்டில் 95.7 மில்லியன் மாத்திரைகளே கையிருப்பில் உள்ளன என்றும் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்தது.

அதனைச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பியபோதே சுகாதார அமைச்சர் அயோடின் போதியளவு கையிருப்பில் இருக்கிறது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளில் அயோடின் மாத்திரைகளின் கையிருப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

பாடசாலை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு; 6 பேர் பலி; பலர் காயம்

Thanksha Kunarasa

அவுஸ்திரேலியாவில் வெள்ளம்: அவசர நிலை பிரகடனம்

Thanksha Kunarasa

தனியார் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி

Thanksha Kunarasa

Leave a Comment