இலங்கை செய்திகள்

யாழில் புத்தரிசி விழா

55 வது தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா நேற்று யாழ்ப்பாணம் கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஏப்ரல் 3 ஆம் திகதி அக்ர சாஸ்ய ஜெயஸ்ரீ மகா போதியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்காக மாவட்ட ரீதியாக புத்தரிசி வழங்குவதற்கான விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரவெட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ரஷியாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்

Thanksha Kunarasa

இது ஒரு நீடித்த போர்! விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகுவோம் ! மக்ரோன்

namathufm

சில நாட்களுக்கு டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.

namathufm

Leave a Comment