இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியா சென்ற நிலையில் தற்போது இலங்கை நாட்டில் உள்ள பலரும் மீண்டும் அகதிகளாக இந்தியா செல்கின்றனர்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளதை அடுத்து பலர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளதாகவும் இன்னும் பலர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரலாம் என்று கூறப்படுவதால் தனுஷ்கோடி பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்
இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே மூன்றாம் கடல்திட்டு பகுதியில் 3 குழந்தைகளுடன் இலங்கையைச் சேர்ந்த 6 பேரை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். மேலும் தனுஷ்கோடி பகுதியில் ரோந்து பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது