இலங்கை செய்திகள்

மருந்து தட்டுப்பாடு – கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தொிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்துகளுக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அவை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

புடினுக்கு வழங்கப்பட்ட கௌரவ தலைவர் பதவி ரத்து!

Thanksha Kunarasa

தமிழின படுகொலை நினைவேந்தல் நாள் அழைப்பு !

namathufm

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய 1600 பிரித்தானிய வீரர்கள்

Thanksha Kunarasa

Leave a Comment