இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின்போது திருத்தத்துக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 35 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து குழுநிலை அமர்வின்போது திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
கொண்டு வரப்பட்ட திருத்தம் போதுமானதல்ல, அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச்செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் திருத்தத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வாக்கெடுப்பை கோரின.
இதனையடுத்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருத்தத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகள் அளிக்கப்பட்டன.