இலங்கை செய்திகள்

திருகோணமலை பாடசாலை மாணவி மூன்று வாரங்களுக்குப் பின் உயிரிழந்துள்ளார்.

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (22) உயிரிழந்துள்ளார்.

கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சேர்ந்த லக்ஷிகா ராமநாதன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். என் மகள் மிகவும் உணர் திறன் கொண்ட பிள்ளை அடிக்கடி கோபம் கொள்பவள் கற்றல் மற்றும் வரைவதிலும் வல்லவர் என சிறுமியின் தயார் தெரிவிக்கின்றார்.

கடந்த மாதம் 27ம் திகதி எனக்கும், எனது கணவருக்கும் இடையே சிறு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மகள் சத்தம் போட்டார். பின்னர் சிறிது நேரம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மகள் குடித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.நான் போய் என்ன செய்தாய் என்று கேட்டேன். அப்போது அவரது வாயிலிருந்து வாயு நுரை வெளியேறியது. எனது மகளை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பழனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் சிறுமியின் தயார் தெரிவித்தார்.

சுமார் மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு !

namathufm

ஜனாதிபதி, பிரதமர் பச்சைக் கொடி

Thanksha Kunarasa

ரம்புக்கனை சம்பவம்: B அறிக்கையிலுள்ள விடயங்களை மாற்றியமைக்காக மன்றில் மன்னிப்பு கோரிய உயர் பொலிஸ் அதிகாரி

Thanksha Kunarasa

Leave a Comment