ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்கும் நட்பு ரீதியான இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இதன்போது இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
