சீன விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு துருக்கி அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. ஆனால், விபத்தில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என, நிகழ்விடத்தில் உள்ள மீட்புக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துருக்கி வெளியுறவு துறை அமைச்சகம், இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் சீன அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.