உலகம் செய்திகள்

கியூபாவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ; பொதுமக்கள் அவதி

கியூபாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு ஏற்கனவே உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் பொதுமக்களுக்கு குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன் , குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டாலும், அதனை வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இது குறித்து அந்நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

62 சதவீத எரிபொருள் மூலம் லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

300 ஈரோ உதவிக் கொடுப்பனவு … மாதாந்தப் பயண ரிக்கெட் 9 ஈரோ!

namathufm

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

Thanksha Kunarasa

நாளை கொழும்பில் மாபெரும் போராட்டம்!

Thanksha Kunarasa

Leave a Comment