இலங்கை செய்திகள்

காதலியை கொன்று களனி ஆற்றில் வீசிய நபர் கைது !

காதலியை கொன்று களனி ஆற்றில் சடலத்தை வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெல்லம்பிட்டிய சேதவத்தையில் பிரதேசத்தை 22 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம் பெற்றுள்ளதுடன், சந்தேக நபரின் வீட்டில் அப்போது யாரும் இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. பின்னர், தமது மகள் காணாமல் போயுள்ளதாக யுவதியின் பெற்றோர் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சந்தேக நபரும் தனது காதலியின் பெற்றோருடன் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொஹிலவத்தை பிரதேசத்தில் வைத்து யுவதி சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சடலம் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வெல்லம்பிட்டிய மற்றும் பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

Thanksha Kunarasa

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி வழங்கப்போகும் செய்தி

Thanksha Kunarasa

மாபெரும் புத்தர் சிலைகளை அழித்த சீனா!

Thanksha Kunarasa

Leave a Comment