இலங்கை செய்திகள்

இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் உயர் இராஜதந்திரி!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர் நாளை (23 திகதி) வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்பு கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வையிடுகிறார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்க உள்ளார்.

நாளை வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் 4வது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத் தலைமை தாங்கவுள்ளனர்.

Related posts

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா

Thanksha Kunarasa

இலங்கை முழுவதும் 7.30 மணி நேர மின்வெட்டு

Thanksha Kunarasa

ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை; வெளிவிவகார செயலாளர்.

Thanksha Kunarasa

Leave a Comment