இலங்கை செய்திகள்

அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொடூரமாக கொலை

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மாவிட்டரை, கெஸ்பேவ கம்மனவத்தையில் வசிக்கும் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக அவரை பொல்லுகளாலும் கூரிய பொருளாலும் தாக்கிய சிலரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் முதலில் தனது வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரை வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஒரு குழுவுடன் திரும்பி வந்து அமைச்சரின் சாரதியை பொல்லுகளால் தாக்கி கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் பிலியந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் நேற்றிரவு அந்த பகுதியில் தீவிர தேடுதல் நடத்திய போதிலும் சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஆவின் தயாரிப்பு இனிப்பு வகைகளின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.

namathufm

மக்கள் விரும்பினால் தலைமை ஏற்க தயார்; ரணில் அதிரடி

Thanksha Kunarasa

ரஷ்ய ஜனாதிபதியின் சிலையை வெளியேற்றிய பிரான்ஸ் அருங்காட்சியகம்

Thanksha Kunarasa

Leave a Comment