இலங்கை செய்திகள்

வரலாற்றில் இல்லாதளவு மற்றுமொரு விலையும் அதிகரிப்பு

வரலாற்றில் இல்லாத வகையில் வெற்றிலையின் விலை 10 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

குலயாபிட்டிய, பகமுன, நாவுல போன்ற பகுதிகளில் வெற்றிலை வியாபாரம் பிரதானமாக இடம்பெற்று வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொத்தாக ரூ.850க்கு வெற்றிலையினை பெற்று, சில்லறை விற்பனை நிலையத்தில் ஒரு இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் வெற்றிலையின் விலை ரூ.2.50 முதல் ரூ.5.00 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெற்றிலையின் விலை திடீரென 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உரம் மற்றும் விவசாய இரசாயன தட்டுப்பாடு காரணமாக வெற்றிலைச் செய்கையின் வளர்ச்சியின்மை, எரிபொருள் விலை அதிகரிப்பு என்பனவே விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம் என்றும் வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

சந்திரிகா, ரணில், சஜித், சம்பிக்க ஒன்றிணைந்து சத்தியாகிரகம்!

Thanksha Kunarasa

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்பு.

namathufm

சிலிண்டர்கள் விநியோகம் குறித்து எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு!

editor

Leave a Comment