உக்ரைனில் ரஸ்யாவின் போருக்காக சீனா ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்பாது. மாறாக பீய்ஜிங் ‘நெருக்கடியைத் தணிக்க அனைத்தையும் செய்யும் என்று அமெரிக்காவுக்கான சீன தூதர் குயின் கேங் கூறியுள்ளார்.
பீய்ஜிங் மொஸ்கோவிற்கு பொருள் ஆதரவை வழங்கினால் ‘விளைவுகள்’ இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த வெள்ளிக்கிழமை, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை எச்சரித்த நிலையிலேயே குயின் கேங்கின் கருத்து வெளியாகியுள்ளது.
பீய்ஜிங் மொஸ்கோவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கடந்த வாரம் வெளியான செய்திகளை தவறான தகவல் என்று சீனா ஏற்கனவே மறுத்திருந்தது.
எனினும் சீனா, உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஸ்யாவை கண்டிக்க தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான CBS உடன் பேசிய கேங், மேற்கு நாடுகளின் பொது கண்டன நிலைப்பாடு இந்த விடயத்தில் உதவாது. மாறாக முறையான ‘நல்ல இராஜதந்திரம் தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார்