கிழக்கிலங்கையின் கொட்டியாபுரப்பற்று , சேனையூர் பழம்பதியின் கல்வியலாளர் பேராசிரியர் பால.சுகுமார் அவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக பணிபுரிந்து, தமிழ் நாடகத் துறைக்கு அளப்பரிய பங்காற்றி, தற்போது லண்டனில் வசித்து வருகின்ற வேளையிலும் தன்னுடைய தமிழ் இலக்கிய பணியினை இடை விடாது செய்து செய்து வருகின்றார்.
அந்த வரிசையில் “சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம்” என்ற அமைப்பின் ஊடாக பல இலக்கியப் படைப்பாக்க நிகழ்வுகளை நடாத்தி, அத்தோடு பல நூல்களை வெளியிட்டு தமிழ் இலக்கியம் சார்ந்த சிறப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் 25.03.2022 (வெள்ளி) ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் பால.சுகுமார் அவர்கள் எழுதிய,
1.ஒரு தேவதையின் சிறகசைப்பு – கவிதைகள்
2.கொடி எழு அன்னப் புரவி- நாவல்
3.கறுப்பி-சிறுகதைகள்
4.எத்தனை முகங்கள் கொண்டாய்- நினைவுத் தொகுப்பு
5.Exam Tamils dance and music – ஆய்வு நூல்.
என ஐந்து நூல்கள், நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் வெளியீடு செய்து வைக்கப்பட இருக்கின்றன. இந்நூல்கள் இலக்கியத்தின் பல்வகைமை கொண்ட கவிதை ,நாவல் ,சிறுகதை, ஆய்வு என்ற பல பரிணாமங்களின் அடிப்படையில் வெளிவர இருக்கின்றது. அவருடைய பணி தொடர்ந்தும் இடம் பெற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்வதோடு. இந்த நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துகிறேன். அனைவரும் நிகழ்நிலையில் கண்டுகளிக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
-சம்பூர் சச்சிதானந்தம்-
நமது ஊடகமும், தமிழ் கூறும் நல்லுலகும் வாழ்த்தி நிற்கின்றது.