நூறாண்டுகளுக்கு முன்னர் உலகை உலுக்கிய பொருளாதார பஞ்ச நிலை. இன்று உலகம் எதிர்நோக்கும் பாரிய சவால் பொருளாதார நெருக்கடியாகும். இதே நிலை 1920 ஆண்டு காலப் பகுதியில் ஆரம்பித்து 1931 வரை உலகை உலுக்கிய சம்பவமாகும் .அன்றும் ஸ்பானிஷ் பூளூ வைரஸ்க்கு பின்னர் இந்த நிலை உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட து.
1929-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி அமெரிக்க பங்குச் சந்தை 13 சதவீதம் வரை சரிந்தது. அந்த திங்கள் கிழமை கருப்பு திங்கள் என்றே அழைக்கப்பட்டது. அடுத்த நாளும் கடுமையாக சரியவே அந்த நாளையும் கருப்பு செவ்வாய் என்றே வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். உலகின் எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது. கிட்டத்தட்ட 1.5 கோடி மக்கள் வேலை இல்லாமல் தவித்தார்கள். இதனால் பல வங்கிகள் மூடப்பட்டன. மக்கள் கடும் உணவு பஞ்சத்தை எதிர் நோக்கினர்.
முதல் உலகப் போர் சிக்கலில் இருந்த பல ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்த பொருளாதார மந்த நிலை மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. இந்த மந்த நிலைமை அமெரிக்க அரசியலையும் மாற்றியது. 1932-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹோவர் தோற்கடிக்கப்பட்டு ரூஸ்வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பொருளாதாரத்தை மீட்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்தார். நான்கு நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை கொடுத்து, வங்கிகளை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்தார். இன்றும் நூறாண்டுகள் கடந்து உலகம் இந் நிலையை எதிர் கொண்டுள்ளது.