உலகம் செய்திகள்

உக்ரைனில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்பநாய்

ரஷ்ய இராணுவத்தால் புதைக்கப்பட்ட 90 இற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை தனது அபார மோப்ப சக்தியால் கண்டுபிடித்த ஜாக் ரசல் ( Jack Russell) இன நாய், உக்ரைன் இராணுவ வீரர்கள் மத்தியில் கதாநாயகன் அந்தஸ்துடன் வலம் வருகிறது.

பேட்ரன் என பெயரிடப்பட்டுள்ள இந்த 2 வயது மோப்ப நாய், வெடிப்பொருட்கள் மற்றும் கண்ணிவெடிகளை கண்டறியும் அவசர சேவைகள் பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சிறிய கவச உடையில் வலம் வரும் பேட்ரனுக்கு, பாலாடைக்கட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு முறை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் போதும் அதற்கு பாலாடைக்கட்டிகளை வழங்கி உக்ரைன் வீரர்கள் உற்சாகப்படுத்துகின்றனர்.

Related posts

பொலீஸாருக்குக் கத்தி காட்டியவர்Gare du Nord இல் சுடப்பட்டு மரணம் !

namathufm

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம்

Thanksha Kunarasa

அரசுக்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டங்கள்

Thanksha Kunarasa

Leave a Comment