கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 6 கிலோ தங்கத்தை பேருந்தில் எடுத்துச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இத்தங்கத்தின் பெறுமதி 120 மில்லியன் எனவும் இச்சம்பவத்தில் வெள்ளம்பிடியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரே கைது செய்துள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்தத் தங்கம் கடற்பரப்பின் ஊடாக யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு கடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.