இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி விபத்தில் ஒருவர் பலி; 22 பேர் காயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை , பின்னால் சென்ற தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பஸ்ஸில் 23 பேர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் அறியமுடிகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மணியந்தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

Thanksha Kunarasa

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு

Thanksha Kunarasa

நாளை BIMSTEC மாநாடு ஆரம்பம்

Thanksha Kunarasa

Leave a Comment