உலகம் செய்திகள்

பெல்ஜியத்தில் கார் மோதி ஏழு பேர் மரணம்!

பெல்ஜியம் நாட்டில் தெருக் களியாட்ட திருவிழா ஒன்றில் சாரதி ஒருவர் காரை வேகமாகச் செலுத்தித் தாக்கியதில் ஏழுபேர் உயிரிழந்தனர். இருபது பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

பெல்ஜியத்தில் மிகவும் பிரபலமான வருடாந்த தெரு விழாவிலேயே (carnival of Strépy-Bracquegnies) இன்று விடிகாலை ஐந்து மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு நாட்டுப் புறக் குழுவினர் மீது மிக வேகமாக வந்த கார் மோதியுள்ளது. குழந்தை உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தென்பகுதி La Louvière என்ற நகரத்தின் மேயர் தெரிவித்திருக்கிறார்.

படுகாயமடைந்தவர்களில் மூவர் அவசர சிகிச்சைகளின் போது உயிரிழந்தனர். களியாட்ட மக்கள் மீது காரைக் கண்டபடி செலுத்திய சாரதியைப் பொலீஸார் துரத்திச் சென்று கைது செய்தனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பொலீஸாருடனான பகைமையோ அல்லது பயங்கரவாத நோக்கங்களோ இருப்பதாகத் தெரியவரவில்லை என்பதை விசாரணையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

மாலைதீவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நீச்சல் – சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு.

namathufm

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மீண்டும் உயர்வு

Thanksha Kunarasa

உக்ரைனில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்பநாய்

Thanksha Kunarasa

Leave a Comment