இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன் – பெரும் பரபரப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றையதினம் சனிக்கிழமை (19-03-2022) மாலை தனியார் வகுப்பொன்றுக்கு சென்று வீடு திரும்பிய வேளை, ஆள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டான்.மாணவனை கடத்தி சென்ற வான் காட்டு பகுதி ஊடாக சென்ற போது, வானில் இருந்து பாய்ந்த மாணவன், காயங்களுடன் கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.பின்னர் காயங்களுடன் தப்பியோடி வந்த மாணவனை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினரிடம் , தான் கடத்தி செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்கனவே தன் வயதை ஒத்த இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்டு, வாயிற்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் வாகனத்தில் காணப்பட்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளான். சம்பவம் தொடர்பில் காவல்த் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வேன் – ஹரின் பெர்னாண்டோ

namathufm

கொழும்பு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கிய மஹிந்த தேசப்பிரிய

Thanksha Kunarasa

ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இன்று விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ

namathufm

Leave a Comment