ரஷ்யா மற்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேசி வரும் நிலையில், இந்தியாவும் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவை ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்பது விவாதமாகி வருகிறது. உக்ரைன் மீதான போர் காரணமாக உலக அரங்கில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதற்கான அமெரிக்கத் தலைமையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரஷ்யாவையும் , அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெரிய ஜனநாயக நாடாக இந்தியா தனித்து நிற்கிறது. குவாட்டின் உறுப்பினராக இருக்கும் இந்தியா சக உறுப்பினர்களான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்து ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என அதிக அழுத்தத்தை எதிர் கொள்கிறது. சனிக்கிழமையன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, புடினின் போர் “உலகளாவிய ஒழுங்கை உலுக்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டதோடு, ஜனநாயக நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கும் அழைப்பு விடுத்தார்.
ரஷ்யாவின் ஆதரவு இதற்கு காரணம் ரஷ்ய ஆயுதங்களை வாங்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ உறுதிப்பாட்டையும் அதன் மற்ற அண்டை நாடான பாகிஸ்தானையும் எதிர்ப்பதற்கு ரஷ்யா அவசியம் என்று கருதுகிறது. பிரதமர் மோடியின் அரசாங்கம் ரஷ்ய ஆயுதங்களுக்கான மாற்றுகள் மிகவும் விலை உயர்ந்தவை என்று நன்கு அறிந்துள்ளது. அதிக ஆயுதங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 250 Su-30 MKi போர் விமானங்கள், 7 கிலோ-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 1,200 க்கும் மேற்பட்ட ரஷ்ய தயாரிக்கப்பட்ட T-90 டாங்கிகள் இவை அனைத்தும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத அமைப்புகள் உள்ளன. அதில் இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்படும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு பேட்டரிகளும் அடங்கும். இந்தியா தனது ரஷ்ய பூர்வீக ஆயுதங்களை மாற்றுவதற்கான செலவு அச்சுறுத்தலாக உள்ளது என கருதுகிறது.
2021-22 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முழு பாதுகாப்பு பட்ஜெட் $70 பில்லியன் ஆகும், மேலும் 114 போர் விமானங்களை வாங்குவதற்கும், சில பழைய ரஷ்ய போர் விமானங்களுக்கு பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இந்தியாவிற்கு $15 பில்லியன் முதல் $18 பில்லியன் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2021 இல் உலகின் எட்டாவது பெரிய ஆயுதங்கள் வாங்கும் நாடாக பாகிஸ்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஷ்யாவின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு நிச்சயம் தேவை என்பதால் தான் நடுநிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.