இலங்கை செய்திகள்

சர்வதேச அழைப்புகளுக்கான தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு

சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

தொலைபேசி நிறுவனங்கள் இது தொடர்பில் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்த நிலையில் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், உள்நாட்டு அழைப்புகளுக்கான கட்டணங்கள் அல்லது இணையத்தள பாவனைக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மகளிர் உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்

Thanksha Kunarasa

எரிவாயு பெறுவதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்.

namathufm

எரிபொருள் லொறி – 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

namathufm

Leave a Comment