பாரிஸின் வல்-து-மான் பகுதியில் Marolles-en-Brie என்ற நகரில் வீடு ஒன்றில் உறை குளிர் சாதனப் பெட்டிக்குள் (congélateur) இருந்து இரண்டு சிசுக்களின் உடல்களைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர். அந்த வீட்டில் வசிக்கும் முப்பது வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பெண்ணுடன் அதே வீட்டில் இணைந்து வசிக்கின்ற ஆண் ஒருவரே வீட்டில் இருந்த குளிர் சாதனப் பெட்டிக்குள் இரண்டு சிசுக்களின் சடலங்கள் உறைந்த நிலையில் கிடைப்பதைக் கண்டு உடனடியாகப் பொலீஸாருக்குத் தகவல் வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சிசுக்களும் எப்போது இறந்தன என்பது தெரிய வரவில்லை. அவை இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். அது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தகவலை வழங்கிய ஆண் ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் என்றும் அவருக்கும் கைதான பெண்ணுக்கும் குழந்தைகள் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு சிசுக்களும் அந்தப் பெண்ணின் முந்தைய கணவருடையவையாகஇருக்கலாம் என்று நம்பப்படுகிறது.இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கும்பரிஷியன் செய்தி நிறுவனம் மேலதிகவிசாரணைகள் நடத்தப்பட்டுவருவதாகதெரிவித்துள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.