உலகம் செய்திகள்

காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்கும் விதமாக கடல்களில் காற்றாலைகளை அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்த நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகரித்துவரும் புவி வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் தங்களது ஆற்றல் மூலங்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாற்றி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நெதர்லாந்து அரசு காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சார உற்பத்தியை இரட்டிப்பாக்கும் விதமாக 10.7 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் கடல்களில் காற்றாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய திட்டங்கள் 2030ஆம் ஆண்டில் கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் மொத்தம் 10 ஜிகாவாட் திறனை இலக்காகக் கொண்டுள்ளன. சுமார் 3 ஜிகாவாட் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளநிலையில் ஆற்றல் மாற்றத்திற்கான செலவினங்களை கணிசமாக அதிகரிக்க உள்ளதாகவும், இதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காதலனால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட யுவதி

Thanksha Kunarasa

அந்தமானில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்!

namathufm

லண்டன் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய சரிவு .

Thanksha Kunarasa

Leave a Comment