இலங்கை செய்திகள்

எரிபொருள் வாங்க வரிசையில் நின்ற முதியவர் உயிரிழப்பு

கடவத்தை ​எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் இன்று(20) மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற ஒருவரே இவ்வாறு மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாகொல பகுதியை சேர்ந்த 70 வயதான ஒருவரே எரிபொருள் வருசையில் நின்று மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் காந்திருந்து, மயங்கி வீழ்ந்து உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்.

நேற்றைய தினம்(19) கண்டியில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.

71 வயதான குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்று(20) நடைபெறவுள்ளன.

Related posts

முடிவின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை

Thanksha Kunarasa

பாடசாலை போக்குவரத்து சேவை இனி இல்லை!!

namathufm

சுவிஸில் மாடியில் இருந்து பாய்ந்தபிரெஞ்சு குடும்பத்தில் நால்வர் பலி!

namathufm

Leave a Comment