வங்க கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் 48 மணி நேரத்தில் சூறாவளியாக தீவிரம் அடையும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்வதையும், கடல் வழியாகச் செல்வதையும் மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.