தற்போதைய அரசு, வடக்கில் புத்தர் சிலைகளை வைத்து இனியும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தவே முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தெற்கில், தற்போதைய கோட்டபய அரசின் மீது சிங்கள மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து புத்த விகாரைகளுக்கும் விஜயம் மேற்கொள்வது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்போது மக்கள் பசிக்கு உணவு இல்லாத நிலை காணப்படுகின்றது, அவ்வாறான நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசானது, வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம், பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி இனியும் சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது, அந்த காலம் முடிந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்