இலங்கை செய்திகள்

மகிந்தவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு

மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று மாவட்ட செயலகம் முன்றலில் இடம்பெற்றது

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளோரின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்..

Related posts

ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகள்

Thanksha Kunarasa

பாப்பரசரை நேரில் சந்தித்தார் பேராயர்

Thanksha Kunarasa

பசிலுக்கு தடுப்பூசி போடப்படவில்லை

Thanksha Kunarasa

Leave a Comment